சென்னை: தமிழகத்தில் பொறியியல் படிப்பில் சேர  நடப்பாண்டில், இதுவரை 1 லட்சத்து 60 ஆயிரத்து 504 பேர் விண்ணப்பித்து உள்ளனர். இது கடந்த ஆண்டைவிட அதிகம்.
கொரோனா பாதிப்பு காரணமாக, தமிழகத்தில் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு கடந்த மாதம் 15-ந் தேதி தொடங்கியது.  இந்த நிலையில், 15ந்தேதி நிலவரப்படி  பொறியியல் படிப்புக்கு 1 லட்சத்து 58 ஆயிரத்து 333 பேர் விண்ணப்பித்து  உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இவர்களில், 1, 28,  118 பேர் விண்ணப்ப கட்டணம் செலுத்தி  உள்ளதாகவும், கடைசி நாளான நேற்று ஒரே நாளில் மட்டும் 2  ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளதாகவும்  கூறப்படுகிறது.
இந்த நிலையில், பொறியியல் படிப்புக்கு இதுவரை  1 லட்சத்து 60 ஆயிரத்து 504 பேர் விண்ணப் பித்து உள்ளனர்.  இதுவரை 90 ஆயிரத்து 272 பேர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்து இருக்கின் றனர்.
கடந்த ஆண்டில் 1 லட்சத்து 33 ஆயிரத்து 116 பேர் விண்ணப்பித்து இருந்த நிலையில், நடப்பாண்டில், அதிகம் பேர் விண்ணப்பம் செய்துள்ளது, மாணவர்களிடையே பொறியில் படிப்பில் சேர ஆர்வம்  அதிகரித்து வருவதை காட்டியுள்ளது.
விண்ணப்பம் பதிவு செய்த மாணவ-மாணவிகளில் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வருகிற 20-ந் தேதி (வியாழக்கிழமை) கடைசிநாள் ஆகும்.