இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை பாகுபாடு இல்லாமல் அனைவரையும் தாக்குகிறது .
அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், ராஜமெளலி, ஐஸ்வர்யா அர்ஜுன் உள்ளிட்ட பலர் முழுமையாக கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். சிலர் கொரோனா பாதிப்பு ஏற்பட்டாலும், அதை வெளியே சொல்லாமலே வீட்டில் தனிமைப்படுத்திக் குணப்படுத்திக் கொண்டுள்ளனர்.
மைல்டு மைல்டு கொரோனா தான் தனக்கு ஏற்பட்டுள்ளதாக கடந்த வாரம் வீடியோ வெளியிட்டு இருந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் தற்போது கொரோனாவின் கோரப் பிடியில் சிக்கி உள்ளார்.
எம்.ஜி.எம் மருத்துவமனையில் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், ஐசியூவில் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
PLEASE DONT SPREAD FAKE NEWS!! Let us all pray for our beloved #spb saar to recover soon and come back and entertain us more🙏🏽🙏🏽🙏🏽 @charanproducer @deepaksub @Premgiamaren @Cinemainmygenes @krishoffl @actor_vaibhav
— venkat prabhu (@vp_offl) August 14, 2020
சில விஷமிகள் வேண்டுமென்றே எஸ்.பி.பி உடல்நிலை குறித்து தவறான தகவல்களைப் பரப்பினர். இது தொடர்பாக இயக்குநர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பதிவில்
“தயவுசெய்து தவறான செய்திகளைப் பரப்ப வேண்டாம். நம் அன்புக்குரிய எஸ்பிபி சார் விரைவில் குணமடையவும், திரும்பி வந்து நம்மை மகிழ்விக்கவும் நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம்” என பதிவிட்டுள்ளார் .