புதுக்கோட்டை:
இன்று நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை வாழ்த்துச் செய்தி வெளியிட்டிருந்தது. இது சர்ச்சையான நிலையில், உடனே அந்த டிவிட் நீக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு அரசு ஊழியர் நடத்தை விதிகள் 1973. விதி-14-Aன்படி எந்த அரசு ஊழியரும் மதம், இனம், இடம், பிறந்த இடம், குடியிருப்பு, மொழி, ஜாதி சம்மந்தமான எந்த அமைப்பிலும் உறுப்பினராகவோ, சம்மந்தப் பட்டோ இருத்தல் கூடாது.

ஆனால், விதியை மீறி, புதுக்கோட்டை காவல்துறையினர், ஒரு மதத்தின்சார்பாக வாழ்த்து செய்தி வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்புகள் கிளம்பியதை தொடர்ந்து, அந்த டிவிட் நீக்கப்பட்டது.
Patrikai.com official YouTube Channel