சென்னை:
டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை வாங்க செல்லும் வாடிக்கையாளர்கள் விரைவில் UPI மூலம் வங்கி கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து டாஸ்மாக் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த இ-பேமென்ட் சேவைகளை ஐசிஐசிஐ வங்கி செய்துள்ளது. அடுத்த இரண்டு மாதங்களில் இந்த வசதி 5300க்கும் மேற்பட்ட கடைகளில் அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வங்கி பாயின்ட் ஆப் சேல்ஸ் டிரான்ஸ்க்ஷன்களை டெபிட் மற்றும் கிரெடிட் கார்கள் மூலம் UPI மற்றும் QR கோடு பிளாட்பார்மில் வாங்கிக் கொள்ளலாம். இந்த முறை அறிமுகம் செய்வதன் மூலம் டாஸ்மாக் கடை கவுண்டர்களில் அதிக பணம் வசூல் செய்வதை தடுக்க முடியும். இதற்கு கண்டிப்பாக UPI வசதி உதவியாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Patrikai.com official YouTube Channel