புதுடெல்லி:
டாக்டர் கபீல் கான் விடுவிக்கலாமா? வேண்டாமா? என்பது குறித்து 15 நாளில் அலகாபாத் நீதிமன்றம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலம் கோரக்பூரில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த சில வாரங்களுக்கு முன் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 70-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியாயின. நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக சிறப்பு விசாரணைக்குழு விசாரணை நடத்தி வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக குழந்தைகள் மருத்துவர் கபீல் கான் உட்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மருத்துவமனை கல்லூரி முதல்வர் ஆர்.கே மிஸ்ரா மற்றும் கபீல் கான் உள்பட 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தனர். வழக்குப் பதிவு செய்யப்பட்டதில் இருந்து கபீர்கான் தலைமறைவாகி இருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், டாக்டர் கபீல் கான் விடுவிக்கலாமா? வேண்டாமா? என்பது குறித்து 15 நாளில் அலகாபாத் நீதிமன்றம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.