நாமக்கல்: வெண்பா கவிஞர் என அழைக்கப்படும், பழம்பெரும் பாடலாசிரியரும், தமிழறிஞருமான பி.கே.முத்துசாமி (வயது 97 உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இவரது ‘மண்ணுக்கு மரம் பாரமா? மரத்துக்கு இலை பாரமா?’ என பாடல் பட்டிதொட்டி எங்கும் பரவி பெரும் வரவேற்பை பெற்றது.
`வெண்பா கவிஞர்’ எனப் போற்றப்படும் பி.கே.முத்துசாமி, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஆர்.புதுப்பட்டியைச் சேர்ந்தவர், 1958-ல் வெளியான `தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற
‘மண்ணுக்கு மரம் பாரமா மரத்துக்கு இலை பாரமா கொடிக்கு காய் பாரமா – பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா மண்ணுக்கு மரம் பாரமா மரத்துக்கு இலை பாரமா என்ற காலத்தால் அழியாத பாடலை எழுதியவர்.
காலத்தை கடந்தும் இப்பாடல் இன்றும் காதில் தேனாக பாய்ந்து கொண்டிருக்கிறது. மேலும், `காவிரியின் கணவன்’ என்ற படத்தில் `சின்ன சின்ன நடைநடந்து, செம்பவள வாய் திறந்து’ என்ற பாடல், `பொன்னித் திருநாள்’ படத்தில் `கண்ணும் கண்ணும் கதை பேசி, ஏன் சிரித்தாய் என்னைப் பார்த்து’ போன்ற பல வெற்றிப் பாடல்களை இவர் எழுதியுள்ளார்.
வயது மூப்பு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே சிகிச்சை பெற்ற வந்தவர், சிகிச்சை பலனின்றி காலமானார். இவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
‘மண்ணுக்கு மரம் பாரமா? மரத்துக்கு இலை பாரமா?’ – பாடல் வீடியோ…