விக்ரம் நாயகனாகவும், வில்லனாகவும் இரட்டை வேடங்களில் நடித்து ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் 2016-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘இருமுகன்’.
இதுவரை இந்தப் படம் வேறெந்த மொழியிலும் ரீமேக் செய்யப்படவில்லை. ஆனால் சமீபத்தில் ‘ப்ராஜக்ட் பவர்’ (Project Power) என்கிற ஹாலிவுட் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது.
வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி நெட்ஃபிளிக்ஸில் இந்தப் படம் வெளியாக உள்ளது.
இரு படங்களிலும் போதை மருந்து, ஐந்து நிமிடத்துக்கு சக்தி என்ற விஷயத்தை வைத்து, ‘இருமுகன்’ படத்தின் ரீமேக்கா இது? அல்லது காப்பியடிக்கப்பட்டுள்ளதா என்ற சிலர் சமூக ஊடகங்களில் விவாதித்து வந்தனர்.
இதற்கு ஷிபு தமீன்ஸின் தயாரிப்பு நிறுவனம், விளக்கமளித்துள்ளது :
We haven’t sold the remake rights to any Global/Regional languages of #ChiyaanVikram’s #IRUMUGAN produced by @shibuthameens
directed by @anandshank. Hope this will clear the social media confusions & comparisons with @iamjamiefoxx #ProjectPower by @netflix @NetflixIndia— Thameens Films (@ThameensFilms) August 10, 2020
‘இருமுகன்’ படத்தின் மாநில மொழி, சர்வதேச ரீமேக் என எந்த உரிமையையும் நாங்கள் விற்கவில்லை. இந்தத் தகவல், சமூக ஊடகத்தில் நிலவும் குழப்பத்தையும், நெட்ஃபிளிக்ஸின் ‘ப்ராஜக்ட் பவர்’ உடனான ஒப்பீட்டையும் நிறுத்தும் என்று நம்புகிறோம்” என்று பகிர்ந்துள்ளது.