சென்னை:
ருத்துவ இடஒதுக்கீடு குறித்து பிரதமர் மோடியுடன்  போனில் உரையாடிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டிவிட் பதிவிட்டுள்ளார்.
அதில், மருத்துவ படிப்பில் ஓபிசி  இடஒதுக்கீடு  குறித்த எனது கடிதத்தின் முன்னேற்றம் குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் விவாதித்தேன்.  மாநிலத்தில் ஓபிசி ஒதுக்கீடு தொடர்பாக அகில இந்திய கோட்டாவின் (AIQ)  பங்களிப்பு,  முன்னுரிமை மற்றும் மாநில இட ஒதுக்கீடு சட்டங்கள் தொடர்பாக ஒரு குழு கூட்டத்தை கூட்டுமாறு  அவரை வலியுறுத்தி னேன். பாதுகாப்பற்றவர்களை நாம் தொடர்ந்து பாதுகாக்க வேண்டும் என்று பதிவிட்டு உள்ளார்.
மருத்துவ படிப்புக்காக இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவீதத்தை இடஒதுக்கீடு செய்ய சட்டம் இயற்றலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  இது தொடர்பாக திமுக தோழமை கட்சிகள் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. மேலும் இடஒதுக்கீட்டை வலியுறுத்தி பிரதமர் மோடிக்கும் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் உள்பட அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் திமுக தலைவர்  ஸ்டாலின் போன் மூலம் பேசி ஆதரவு கோரி உள்ளார். மேலும், இதுகுறித்து விவாதிக்க ஒரு குழு கூட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.

இந்த நிலையில், பிரதமர் மோடியுடன் ஸ்டாலின் போன் மூலம் இடஒதுக்கீடு குறித்து வலியுறுத்தி உள்ளார்.

முன்னுரிமை மற்றும் மாநில இடஒதுக்கீடு சட்டங்களை அரசு ஆதரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளேன். மத்திய மற்றும் மாநில அரசுகளின் சுகாதாரத்துறை அதிகாரிகள், இந்திய மருத்துவத்துறை கவுன்சில் அதிகாரிகள் உடைய குழு அமைக்க வேண்டும். உயர்நீதிமன்றம் தீர்ப்பை உடனே செயல்படுத்த வேண்டும். பாதுகாப்பற்றவர்களை நாம் தொடர்ந்து பாதுகாக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.