சென்னை:
மாரிதாஸ் என்பவர் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி மிக விரைவில் மக்கள் மத்தியில் பிரபலமானவர்.

மத ரீதியான பிரச்சினைகளை கிளப்பக் கூடிய கருத்துக்களை தனது ஆயுதமாக பயன்படுத்தி வரும் மாரிதாஸ் சில தொலைக்காட்சி சேனல்களையும் குறிவைத்து தாக்கி வருகிறார். போலி இ-மெயில் மூலம் மோசடி செய்ததாக, தனியார் தொலைக்காட்சி நிர்வாகம், மாரிதாஸ் மீது சென்னை நகர குற்றவியல் போலீசில் புகார் மனு அளித்தது. இதனையடுத்து யுடியூப் சேனல் நிர்வாகி மாரிதாஸ்மீது 5 பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.  இந்நிலையில் சென்னை மாநகர் காவல்துறையில் தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக மதுரை சூர்யா நகர் பகுதியில் உள்ள மாரிதாஸ் வீட்டில் காவல்துறையினர் சோதனை ஆவணங்களை சரிபார்க்க வீட்டிற்குள் காவல்துறையினரை அனுமதிக்க மறுக்கப்பட்டது.