புதுடெல்லி: இந்தாண்டு ஜூன் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.90,917 கோடியுடன் ஒப்பிடுகையில், ஜூலை மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.87,422 என்பதாக குறைந்துள்ளது என்று நிதியமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேசமயம், இந்த ஜூலை மாத வசூல், கடந்த மாத வசூலான ரூ.62,009 கோடிகள் மற்றும் ஏப்ரல் மாத வசூலான ரூ.32,294 ஆகியவற்றோடு ஒப்பிடும்போது அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை மாதம் வசூலான மொத்தம் ரூ.87,422 கோடியில், சிஜிஎஸ்டி தொகை ரூ.16,147 கோடிகள், எஸ்ஜிஎஸ்டி தொகை ரூ.21,418 கோடிகள், ஐஜிஎஸ்டி தொகை ரூ.42,592 கோடிகள் மற்றும் வரி ரூ.7,265 கோடிகள்” என்று நிதியமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு இதேமாதத்தில் வசூலான ஜிஎஸ்டி வருவாயில், இந்த மாதம் 86% மட்டுமே வசூலாகியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.