பெங்களூரு: கர்நாடகாவில் இன்று மேலும் 5,172 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து கர்நாடக மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: கர்நாடகாவில் இன்று 5,172 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதனால் மாநிலத்தின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,29,287 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரேநாளில் 98 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். அதன் மூலம் இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,412 ஆக உயர்ந்துள்ளது.
ஒரே நாளில் 3,860 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 53,648 ஆக அதிகரித்துள்ளது.
கர்நாடகாவில் தற்போது 73,219 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் 602 பேர் தீவிர சிகிச்சைப்பிரிவில் உள்ளனர் என்று மாநில சுகாதாரத்துறை அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.