ராஜ்யசபா எம்.பி. அமர்சிங் காலமானார்.
மூத்த சமாஜ்வாதி கட்சியின் உறுப்பினரான அமர்சிங் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்ததாக கூறப்படுகிறது. அவருக்கு வயது 64.
சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவராகவும், மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்து வந்தவர் அமர்சிங். கடந்த 2010 ஆம் ஆண்டில், முலாயம் சிங் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், சமாஜ்வாடி கட்சியின் அனைத்து பதவிகளிலிருந்தும் ராஜினாமா செய்தார், பின்னர் அதன் தலைவரான முலாயம் சிங் யாதவ் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
மூத்த அரசியல்வாதியாக அமர்சிங் கடந்த சில காலமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிறுநீரக கோளாறு காரணமாக அவதிப்பட்டவர், துபாயில் சிகிச்சை பெற்று திரும்பினார்.
பின்னர், 2016ம் ஆண்டு மீண்டும் அரசியலுக்கு திரும்பினர். அப்போதைய உத்தரபிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் உட்பட கட்சியின் ஒரு பிரிவினரின் கடுமையான எதிர்ப்பை மீறி சமாஜ்வாடி கட்சியின் ஆதரவோடு மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த நிலையில் மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டவர், கடந்த இரண்டு மாதங்களாக சிங்கப்பூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி காலமானாக அறிவிக்கப்பட்டு உள்ளது.