போபால்:

வ்வொரு இந்தியரின் சம்மதத்துடன்தான் அயோத்தில் ராமர்கோவில் கட்டப்படுகிறது என்று மத்திய பிரதேச முன்னாள் முதல்வரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான  கமல்நாத் கூறியுள்ளார்.

அயோத்தி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பையடுத்து, அங்கு ராமர்கோவில் கட்டுவதற்காக ஸ்ரீராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையை உருவாக்கியது. அந்த அறக்கட்டளை மூலம் ராமர் கோயில் கட்டுவதற்கான   பூர்வாக பணிகள் நடைபெற்று வருகின்றன.

வரும் 5ந்தேதி (ஆகஸ்டு 2020) கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற உள்ளது. பிரதமர் மோடி கலந்துகொண்டு ராமர்கோவிலுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும் பாஜக மூத்த தலை வர்கள் அத்வானி, முரளிமனோகர் ஜோதி, உ.பி. முதல்வர் யோகி, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்,  உள்பட 200 பேர் வரை கலந்துகொள்வார்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா காலத்தில் ராமர்கோவில் கட்ட அடிக்கல் நாட்டப்படுவது விமர்சனங்களை எழுப்பி உள்ள நிலையில், காங்கிரஸ்மூத்த தலைவர்கள் வரவேற்று உள்ளனர்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி விருபியதாக  மூத்த காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் கூறிய நிலையில், தற்போது மூத்த தலைவரும், மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத்தும் வரவேற்றுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்,  ”அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதை வரவேற்கிறேன். இது நாட்டு மக்களின் நீண்ட நாளைய விருப்பம் அது. அயோத்தியில்  ஒவ்வொரு இந்தியரின் சம்மதத்துடன்தான் ராமர்கோவில்  கட்டப்படுகிறது. இது இந்தியாவில் மட்டும் தான் சாத்தியமாகும். இந்தியர் ஒவ்வொருவரின் நம்பிக்கையின் மையப்புள்ளியாக ராமர் கருதப்படுகிறார்”

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.