
ஆடுகளம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு, வெள்ளாவி வச்சு வெளுத்த வெள்ளைக்காரியாக நம் அனைவருக்கும் பரிச்சயமானவர் நடிகை டாப்ஸி பன்னு.
டாப்ஸியுடன் இணைந்து அறிமுகமான பல கதாநாயகிகள் இன்றளவும் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடிப்பதையே விரும்பும் நிலையில் டாப்ஸி அதிலிருந்து சற்று விலகி பெண்களைப் பற்றிய சமூக விழிப்புணர்வு கொண்ட படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.
திரைப்படங்களிலும், நிஜத்திலும் நம் அனைவரையும் தொடர்ந்து ஆச்சரியப்படுத்தி வரும் டாப்ஸி பன்னு ஆகஸ்ட் 1ம் தேதியான இன்று தனது 33வது பிறந்தநாளை கொண்டாடி வருவதையொட்டி நண்பர்கள் ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை கூறிவருகின்றனர்.
Patrikai.com official YouTube Channel