புதுச்சேரி:
பக்ரீத் பண்டிகையையொட்டி நாளை (ஆகஸ்டு1) மசூதிகளில் தொழுது கொள்ள புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அனுமதி வழங்கி உள்ளார்.

முஸ்லிம்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் நாளை (சனிக்கிழமை) நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. தமிழகம் உள்பட பல மாவட்டங்களில் கொரோனா ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளதால், பொது இடங்களில் தொழுகைக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. வீடுகளிலேயே தொழுகை நடத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், கேரளா மற்றும் மேற்கு வங்கம் மாநிலங்களில், கடும் கட்டுப்பாடுகளுடன் சமூக விலகலைக் கடைப்பிடித்து ஈகைத் திருநாளில் (பக்ரீத் பண்டிகை) முஸ்லிம்கள் மசூதிகளில் தொழுகை நடத்த மாநில அரசுகள் அனுமதி வழங்கின.
கொரோனா ஊரடங்கால், மசூதி திறக்கப்படாமல் உள்ள நிலையில், பக்ரீத் பண்டிகையான இன்று மசூதிகளில் தொழுகை நடத்திக்கொள்ள கேரள அரசு நேற்று அனுமதி அளித்தது. அதுபோல மேற்குவங்க முதல்வர் மம்தாவும் அனுமதி வழங்கி உள்ளார்.
இதையடுத்து, புதுச்சேரி மாநிலத்தில் பக்ரீத் பண்டிகை கொண்டாடும் வகையில், சமூக விலகலைக் கடைப்பிடித்து முஸ்லிம்கள் மசூதிகளில் தொழுகை நடத்த நாராயணசாமி தலைமையிலான மாநில அரசு அனுமதி வழங்கி உள்ளது.
Patrikai.com official YouTube Channel