டெல்லி: பி.எஸ் 4 ரக வாகனங்களை பதிவு செய்ய உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் பிஎஸ் 4 ரக வாகனங்களை உற்பத்தி செய்யவோ, விற்கவோ கூடாது என தடை விதிக்கப்பட்டது. ஆனால் வாகன விற்பனையாளர்கள் கூட்டமைப்பின் கோரிக்கையை அடுத்து, 10 நாட்களுக்கு கட்டுப்பாடுகளுடன் வாகனங்களை விற்பனை செய்து கொள்ள உச்சநீதி மன்றம் அனுமதித்து இருந்தது.
இந் நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது உச்ச நீதி மன்றம் வழங்கிய அனுமதியை விட அதிகமாக வாகனங்களை விற்றது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல என்று நீதிபதிகள் கூறினர். மறு உத்தரவு வரும்வரை வாகனங்களை பதிவு செய்ய தடையும் விதித்தது.
முன்னதாக மார்ச் 27ம் தேதி வழக்கு விசாரணையின் போது, 6 நாட்கள் அமலான லாக்டவுன் காரணமாக 10 சதவீத வாகனங்களை விற்பனை செய்து கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது. டெல்லி-என்சிஆர் பிராந்தியத்திற்கு இந்த உத்தரவு பொருந்தாது என்றும் கூறியிருந்தது.
ஆனால் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக வாகனங்கள் விற்கப்பட்டு உள்ளதற்கு உச்ச நீதிமன்றம் அதிருப்தியை தெரிவித்திருந்தது, குறிப்பிடத்தக்கது.