கோவை:
கோவை அருகே பெரியார் சிலைமீது காவி சாயம் ஊற்றி  அவமதித்த அருண் கிருஷ்ணன் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் கந்தசஷ்டி கவசம் அவமதிப்பு விவகாரம் பூதாகரமாக எழுந்த நிலையில்,  கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலைக்கு மர்ம நபர்கள் காவி சாயத்தை ஊற்றி அவமதிப்பு செய்ததனர். மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து, காவிரி பெயிண்டை ஊற்றியதாக,  பாரத்சேனா அமைப்பின் தெற்கு மாவட்ட அமைப்பாளர் அருண் கிருஷ்ணன் என்பவர் போத்தனூர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
அருணை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இந்நிலையில்  கோவை மாநகர காவல் ஆணையர் அருண் கிருஷ்ணனை  தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்த, அவரை  தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் காவல்துறை  கைது  செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.