சென்னை:
கொரோனா ஊரடங்கு காரணமாக கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், பள்ளிக் கல்வித்துறையில் பணியாற்றி வந்த 4 இணை இயக்குநர்கள் பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று கல்வித்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிகளை திறப்பது குறித்து ஆலோசனை நடத்திய நிலையில், 4 இணை இயக்குனர்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

இதுகுறித்து, பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதவாது,
மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்ககத்தில் இணை இயக்குநராக பணியாற்றி வந்த கீதா, ஆசிரியர் தேர்வு வாரிய கூடுதல் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆசிரியர் தேர்வு வாரியத்தில் கூடுதல் உறுப்பினராக இருந்த நரேஷ், பள்ளிக் கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் தொழில் கல்வி பிரிவின் இணை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தொழில் கல்வி இணை இயக்குநராக இருந்த சுகன்யா, பள்ளிக் கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் இடைநிலைக் கல்வி இணை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இடைநிலைக் கல்வி இணை இயக்குநராக இருந்த கோபிதாஸ், மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்கக இணை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.