
சென்னை: ஆன்லைன் முறையில் நடந்துவரும் ‘லெஜண்டு’ செஸ் தொடரில், தொடர்ச்சியாக தோற்றுவந்த நிலையில், தனது முதல் வெற்றியைப் பதிவுசெய்துள்ளார் ஆனந்த்.
உலகளாவிய அளவில் மொத்தம் 10 செஸ் நட்சத்திரங்கள் பங்கேற்கும் இத்தொடரில், தனது ஏழாவது சுற்றில், இஸ்ரேல் நாட்டின் போரிஸ் ஜெல்பாண்டுடன் மோதினார் ஆனந்த்.
இதில், முதல் இரண்டு போட்டிகளில் வென்ற ஆனந்த், தனது மூன்றாவது போட்டியை டிரா செய்தார்.
இதன்மூலம், 2.5-0.5 என்ற புள்ளிகளின் அடிப்படையில் தனது முதல் வெற்றியைப் பெற்றதுடன், மொத்தம் 6 புள்ளிகள் பெற்று 8வது இடத்திற்கு முன்னேறினார். 20 புள்ளிகள் பெற்ற மாக்னஸ் கார்ல்சன் முதல் இடத்தில் நீடிக்கிறார்.
Patrikai.com official YouTube Channel