சென்னையில் அடுத்த மாதமும்  பஸ்கள் ஓடாது..

தமிழகத்தில் ஊரடங்கு வரும் 31 ஆம் தேதியுடன் ( வெள்ளிக்கிழமை) முடிவடைகிறது.

ஊரடங்கை நீடிப்பதா ? வேண்டாமா? என்பது குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று  ஆலோசனை நடத்துகிறார்.

இதன் தொடர்ச்சியாக நாளை மருத்துவ நிபுணர்களுடன் விவாதிக்க உள்ளார்.

இதன் பின்னர் ஊரடங்கு நீடிப்பு குறித்து அதிகாரப்பூர்வமாக முதல்வர் அறிவிப்பார்.

எனினும் ஊரடங்கு நீடிக்கப்படும் என்றே தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த முறை ஊரடங்கில் சில தளர்வுகளும் இருக்கும்.

இந்த புதிய ஊரடங்கு எப்படி இருக்கும்?

*சென்னையில் அடுத்த மாதமும் பொது போக்குவரத்து இருக்காது.

*ஆனால் மற்ற மாவட்டங்களில், பஸ்கள் இயங்க அனுமதிக்கப்படும்.

*வெளி மாநிலங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட மாட்டாது.

*கல்வி நிறுவனங்கள்,  ஷாப்பிங்  மால்கள், சினிமா தியேட்டர்கள் திறக்கப்பட மாட்டாது.

-பா.பாரதி.