சென்னை:
ய்வுபெற்ற உயர்அதிகாரிகளுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் பணியாளர் அலவன்சு வழங்க தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது. கொரோனா காலத்தி கடுமையான நிதிச்சிக்கல் எழுந்துள்ள நிலையில், உயர்அதிகாரிகளின்  வேண்டுகோளை ஏற்று, தமிழகஅரசு இந்த அலவன்சு அறிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

நாட்டில் ஓய்வுபெற்ற உயர்அதிகாரிகளான ஐஏஎஸ், ஐபிஎஸ், உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதி மன்ற நீதிபதிகள் போன்றவர்களுக்கு எப்போதும்போல ஓய்வூதியம் வழங்கப்பட்டு வரும் நிலையில் பல்வேறு சலுகைகளும் வழங்ககப்பட்டு வருகின்றன. இதற்காக ஒவ்வொரு மாநிலமும் கோடிக்கணக்கில் பணத்தை செலவிட்டு வருகிறது.
இந்த நிலையில், தற்போது உயர்அதிகாரிகளுக்கு சேவை செய்யும் வகையில் பணியாளர் நியமிக்கும் வகையில், அவர்களுக்கு ரூ.10ஆயிரம் அலவன்சு வழங்கப்படும் என தமிழகஅரசு அறிவித்து உள்ளது.
ஏற்கனவே இது தொடர்பாக கர்நாடக மாநிலத்தில் இது ஓய்வுபெற்ற ஐகோர்ட் நீதிபதிகள் வழக்கில் செய்யப்பட்ட ஏற்பாட்டை தொடர்ந்து,  ரூ.10,500 வழங்கப்பட்டு வருவதால், அதைச் சுட்டிக்காட்டி, தமிழ்நாடு  ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சங்கம் சமர்ப்பித்த கடிதம் மற்றும் ஓய்வுபெற்ற பிற கூடுதல் செயலாளர்களின் கோரிக்கைகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதைத்தொடர்ந்து,  ஓய்வுபெற்ற அதிகாரத்துவத்தினர் கூடுதல் சலுகைகளைப் பெறுவதற்கு ஓய்வுபெற்ற தலைமை / கூடுதல் செயலாளர்களுக்கு ஒரு பெயரளவு மஸ்டர் ரோலில் (பணியாளர் கொடுப்பனவு) ஒரு மாதத்திற்கு ரூ .10,000 ஊதியத்தில் ஈடுபட அனுமதிக்க முடிவு செய்துள்ளனர்.
தமிழகஅரசின் இந்த உத்தரவு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ஓய்வுபெற்ற அதிகாரத்துவத்தினர் கூட இதைக் கேட்பது வருத்தமளிக்கிறது. அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படவில்லையா? அவர்கள் விரும்பினால் அவர்கள் பணம் செலுத்தவும், வீட்டு உதவி ஊழியர்களை வைத்திருக்கவும் முடியவில்லையா? கடைசி துளிக்குக்கூட  மாநிலத்திடம் இருந்து பணத்தை கறப்பது எந்தவிததத்தில் நியாயம் என்று சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.