சென்னை

சென்னை நகர விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் அலுவலக பாதுகாப்பு பணியில் இருந்த சேகர் என்னும் எஸ் ஐ துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.

சென்னை தி நகரில் விஸ்வ இந்து பரிஷத் அலுவலகம் உள்ளது.  இந்த அலுவலகத்துக்கு காவல்துறை பாதுகாப்பு இடப்பட்டிருந்தது.  இதில் பாதுகாப்பு அதிகாரியாக ஆயுதப்படையின் சிறப்பு உதவி ஆய்வாளர் (எஸ் ஐ) ஆக சேகர் என்பவர் நியமிக்கப்பட்டிருந்தார்.  சுமார் 47 வயதாகும் சேகர் 1994 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்துள்ளார்.

சேகர் படிப்படியாகப் பதவி உயர்வு பெற்றுக் கடந்த 2007 ஆம் ஆண்டு எஸ் ஐ ஆக பதவி உயர்வு பெற்றார்.   கடந்த 2009 முதல் எஸ் ஐ ஆக ப்பணியாற்ரிவரும் இவருக்குத் திருமணமாகி சங்கீதா என்னும் மனைவியும் 11 வயதில் ஒரு மகன் மற்றும் 9 வயதில் ஒரு மகள் உள்ளனர்.   இவர் வேலூர் காட்பாடி பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.

நேற்று மாலை விஸ்வ இந்து பரிஷத் அலுவலகத்தில் தனது ஓய்வு அறையில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.   இதை அறிந்த மாம்பலம் காவல் நிலைய காவல்துறையினர் உடனடியாக விரைந்து வந்து அவர் உடலைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.  தற்கொலைக்கான சரியான காரணம் குறித்து அதிகாரப் பூர்வ தகவல் வெளியாகவில்லை