
லண்டன்: இங்கிலாந்து அணிக்கெதிரான இறுதி டெஸ்ட் போட்டியில் 399 ரன்கள் என்ற இலக்கை விரட்டும் விண்டீஸ் அணி, 3வது நாள் ஆட்டநேர இறுதியில், வெறும் 10 ரன்களுக்கே 2 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
முன்னதாக, தனது இரண்டாவது இன்னிங்ஸில் 226 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த இங்கிலாந்து அணி, டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. இதன்மூலம் 399 ரன்கள் விண்டீஸ் அணிக்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய இங்கிலாந்து அணிக்கு, துவக்க வீரர் பர்ன்ஸ் 90 ரன்களும், சிப்லி 56 ரன்களும், ஜோ ரூட் 68 ரன்களும் அடித்தனர். அதாவது, முதல் 3 வீரர்களுமே அரைசதம் அடித்தனர்.

முதல் டெஸ்ட் போட்டியில் பெரிய ஆதிக்கம் செலுத்திய விண்டீஸ் அணி, மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அப்படியே மாறிபோனது.
இன்னும் 2 நாள் ஆட்டம் முழுமையாக உள்ள நிலையில், இந்த டெஸ்ட் தொடரை இங்கிலாந்து கைப்பற்றும் என்பதே நிதர்சனம். ஒருவேளை, ஏதேனும் அதிசயம் நிகழ்ந்தால் விண்டீஸ் அணி வெல்லலாம்!
Patrikai.com official YouTube Channel