தலைமைச் செயலகம் செல்ல டாக்டர் சான்றிதழ் கட்டாயம்..

நாகாலாந்தில் வரும் 30 ஆம் தேதி ஒரு நாள் மட்டும் சட்டசபை கூட்டம் நடைபெறுகிறது.

இதில் கலந்து கொள்ள தலைமை செயலகம் வருவோருக்கு நிறைய கட்டுப்பாடுகளை விதித்து சட்டப்பேரவை தலைவர் லோங்குமார் அறிவித்துள்ளார்.

அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள்,தலைமை செயலக ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரும் கொரோனா தொற்று இல்லை என டாக்டர்களிடம் சான்றிதழ் பெற்று, அதனைக் கொண்டு வந்தால் மட்டுமே  சட்டசபைக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

செய்தி சேகரிக்க வரும் செய்தியாளர்களும், கொரோனா இல்லை எனச் சான்றிதழ் கொண்டுவர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஒரு ஊடகத்தில் இருந்து ஒரு செய்தியாளர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்.

சட்டசபைக்குள் ஒரு பெஞ்சில் ஒரு எம்.எல்.ஏ. மட்டுமே அமரலாம்.

இப்போது அங்குள்ள பெஞ்சுகளின் எண்ணிக்கையின் படி பார்த்தால் 30 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே அமரலாம். இதனால் எஞ்சிய 30  எம்.எல்.ஏ.க்கள் , இதற்கு முன்னர் அதிகாரிகள் அமர்ந்திருந்த இடத்தில் அமர வேண்டும்.

பல்வேறு துறைகளின் அதிகாரிகள், தலைமைச் செயலக ஊழியர்கள் உள்ளிட்டோர்  பார்வையாளர் மாடத்தில் அமர வேண்டும் எனப் பேரவைத் தலைவர் லோங்குமார் உத்தரவிட்டுள்ளார்.

-பா.பாரதி.