‘’கேளடி கண்மணி ‘கிளைமாக்ஸ்’ காட்சிக்கு உயிர் கொடுத்த இளையராஜா..’’

தமிழ் சினிமாவின் ‘ட்ரெண்ட் செட்டர்’ படங்களில் ஒன்று வசந்த் இயக்கிய ‘’கேளடி கண்மணி’.

அந்த திரைப்படம் வெளியாகி இன்றுடன் 30 ஆண்டுகள் ஆகிறது.

இந்த படத்தின் ‘ஹைலைட்-

மூச்சு விடாமல் (படத்தின் ஹுரோ) எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும்’’ மண்ணில் இந்த காதலின்றி யாரும் வாழக்கூடுமோ ‘’ என்ற பாடல்.

’’இந்த பாடல் முழுவதையும் மூச்சு விடாமல் பாட வேண்டும்’’ என பாலசுப்ரமணியத்திடம் சொல்லியுள்ளார், வசந்த்.

மூச்சுத்திணறிப்போனார், எஸ்.பி.பி.

‘’ ஒரு பாடல் முழுவதையும் மூச்சு விடாமல் பாட வேண்டுமா? சான்சே இல்லை. ஒரே மூச்சில் 5 நிமிடம்  ஒரு பாடலை பாடுவது சாத்தியமே இல்லை’’ என்று மறுத்து விட்டார், எஸ்.பி.பி.

கடைசியாக 40 வினாடிகள், மூச்சு விடாமல் இந்த பாடலை பாடிக்கொடுத்துள்ளார்.

இந்த படத்தின் பிரதான கதாநாயகி வேடத்துக்கு சுஹாசினியை தான், மனதில் வைத்திருந்தார், வசந்த்.

சுஹாசினி அப்போது ‘பிஸி’ யாக இருந்ததால், பின்னர் ராதிகா ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

‘’இளையராஜா, ஒரு படத்தின் பின்னணி இசையை (பேக் கிரவுண்ட் மியூசிக்) முடித்து கொடுக்க மூன்று நாட்கள் எடுத்துக்கொள்வார். ஆனால் ‘கேளடி கண்மணி’ படத்தின் ’கிளைமாக்ஸ்’ காட்சிக்கு மட்டும்  பின்னணி இசை அமைக்கப் பல நாட்கள் எடுத்துக்கொண்டார். இளையராஜாவின் பின்னணி இசை தான் படத்தின் ’கிளைமாக்ஸ் ‘ காட்சிக்கு உயிர் கொடுத்தது’’ என்று நெகிழ்கிறார், வசந்த்.

-பா.பாரதி.