ரஷ்யா தனது கோவிட் – 19 தடுப்பு மருந்தின், பல ஆயிரம் பேர் பங்குகொள்ளவுள்ள மூன்றாம் கட்ட சோதனையை ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ளதாக ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியத்தின் தலைவர் கிரில் டிமிட்ரிவ் தெரிவித்தார்.
இன்னும் சோதனையில் உள்ள இந்த தடுப்பு மருந்து இந்த ஆண்டில் சுமார் 30 மில்லியன் டோஸ்கள் அளவிற்கு உற்பத்தி செய்ய ரஷ்யா திட்டமிட்டுள்ளது. அதுமட்டுமின்றி, வெளிநாடுகளில் உள்ள உற்பத்தியாளர்களைக் கொண்டு மேலும் 170 மில்லியன் டோஸ்கள் அளவிற்கு உற்பத்தி செய்யவும் திட்டமிடப்படுள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த வாரம் நிறைவடைந்த இந்த தடுப்பு மருந்தின் முதற்கட்ட மனித பரிசோதனையின் முடிவுகளின் படி, ஆராய்ச்சியாளர்கள் இது மிகவும் பாதுகாப்பானது மற்றும் தொற்று நோய்க்கு எதிரான நோயெதிர்ப்பு செயல்பாடுகளைத் தூண்டுகிறது என்று கண்டறிந்துள்ளனர். இருப்பினும் இந்த முடிவுகளை மேலும் தெளிவான மற்றும் மேற்கொண்டு சோதனைகளின் மூலம் சரிபார்க்கப்பட வேண்டியுள்ளது. முதற்கட்ட பரிசோதனையில் 38 நோயாளிகள் பங்கேற்றனர்.
“தற்போதைய முடிவுகளின் அடிப்படையில் இந்த தடுப்பு மருந்து இது ஆகஸ்ட் மாதத்தில் ரஷ்யாவிலும், செப்டம்பர் மாதத்தில் வேறு சில நாடுகளிலும் பயன்பாட்டிற்கு அங்கீகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம். எனவே, இது உலகில் அங்கீகரிக்கப்பட்ட முதல் தடுப்பூசியாக மாறும்” என்று அவர் செய்திக்கு அளித்த அறிக்கையில் அந்நிறுவனம் கூறியுள்ளது.
ரஷ்ய மூன்றாம் கட்ட சோதனைகள் உள்நாட்டிலும் இரண்டு மத்திய கிழக்கு நாடுகளிலும் நடத்தப்படும் என்றும், 100 பேர் கொண்ட இரண்டாம் கட்ட விசாரணை ஆகஸ்ட் 3 ஆம் தேதி முடிவடைந்த பின்னர், 3ஆம் கட்ட சோதனைகள் தொடங்கும் என்றும் டிமிட்ரிவ் கூறினார். சோதனை தளமாக செயல்பட ரஷ்யா சவூதி அரேபியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. மேலும், ஒரு உறபத்தியாளராக இணையவும் பேசப்பட்டுள்ளது என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார். ரஷ்ய தடுப்பு மருந்தின் உருவாக்குனரான மாஸ்கோவின் கமலேயா நிறுவனம், மருத்துவ பரிசோதனைகளுக்கு தேவையான மருந்துகளைத் தயாரித்து வருகிறது. மேலும், தனியார் மருந்து நிறுவனங்களான அலியம் – சிஸ்டெமாவின் கூட்டு நிறுவனமான ஆர்-ஃபார்மின் ஒரு பகுதியளவும் மற்றும் பாட்டில்களைக் கையாளுகிறது.
“ரஷ்யாவில் கூட்டு நோய் எதிர்ப்பு சக்தி பெறப்பட்டுள்ளது என என்று அழைக்கப்படுவதற்கு சுமார் 40 -50 மில்லியன் மக்களுக்கு தடுப்பு மருந்து கொடுக்கப்பட வேண்டும்,” என்று டிமிட்ரிவ் கூறினார். “எனவே, இந்த ஆண்டு தேவைக்கு சுமார் 30 மில்லியன் டோஸ்களை (உள்நாட்டில்) உற்பத்தி செய்ய முடியும் என்று நம்புகிறோம். தடுப்பு மருந்து இறுதி செய்யப்பட்டதும் மீதமுள்ளவற்றை அடுத்த ஆண்டு பார்க்கலாம்” என்று அவர் மேலும் கூறினார். ரஷ்யா மேலும் ஐந்து நாடுகளுடன் உற்பத்தி தளங்களை அமைக்க ஒப்பந்தம் போட்டுள்ளது. இதன்படி, இந்த ஆண்டு வெளிநாட்டில் 170 மில்லியன் டோஸ் வரை உற்பத்தி செய்ய முடியும் என்று டிமிட்ரிவ் கூறினார். உலக சுகாதார நிறுவனத்தின் கணக்குபடி, 100 க்கும் மேற்பட்ட தடுப்பு மருந்துகள் உருவாக்கப்பட்டு சோதனையில் உள்ளன. அதில், சீனாவின் சினோபார்ம் மற்றும் அஸ்ட்ராஜெனிகா – ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக தடுப்பு மருந்துகள் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட மனித பரிசோதனையில் உள்ளன.