நடிகர் விஷாலுக்கு கொரோனா.. தந்தைக்கும் வைரஸ் தொற்று..
நடிகர் விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி, சினிமா படத்தயாரிப்பாளராகவும் இருக்கிறார்.
அவருக்குக் கொஞ்ச நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இரண்டு, மூன்று தினங்களில் விஷாலுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
திடீர் காய்ச்சல், தொண்டை வலி, களைப்பு போன்ற அறிகுறிகள் இருவருக்குமே ஆரம்பத்தில் இருந்துள்ளது.
பரிசோதனையில் கொரோனா தொற்று ஊர்ஜிதம் ஆனதால் தந்தையும் மகனும் ஆயுர்வேத சிகிச்சை மேற்கொண்டனர்.
அவர்களைப் பரிசோதனை செய்த டாக்டர் 15 நாட்களுக்கு மருந்து எழுதிக் கொடுத்து, அசைவ உணவைத் தொடக்கூடாது என்று அறிவுறுத்தினர்.
எனினும் முட்டை உள்ளிட்ட எந்த உணவையும் உட்கொள்ளலாம் எனக் கூறியுள்ளனர்.
டாக்டர்கள் சொல்லை வேத வாக்காகக் கடைப் பிடித்த விஷாலும், ஜி.கே.ரெட்டியும் இப்போது பூரண குணம் அடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-பா.பாரதி.