சென்னை,

மிழக காவல்துறையில் 6140 புதிய காவலர்கள் தேர்வு நடைபெற உள்ளது.  இதற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும், அதற்கு தேவையான சான்றிதழ்கள் என்னென்ன என்பது குறித்து, போலீஸ் பணிக்கு தேர்வு,  சீருடை பணியாளர் தேர்வாணையம் விவரங்களை தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து தமிழக அரசின்  சீருடை பணியாளர் தேர்வாணையம் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது,

காவல்துறையில் ஆயுதப்படையில் காலியாகவுள்ள பணியிட விவரம்

5538 இரண்டாம் நிலைக் காவலர்கள் (grade-2 constable) (ஆண், பெண் மற்றும் மூன்றாம் பாலினம்)

சிறைத்துறையில் காலியாகவுள்ள 340 இரண்டாம் நிலை சிறைக்காவலர்கள் (ஆண் மற்றும் பெண்)

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் காலியாகவுள்ள 216 தீயணைப்போர் (ஆண்) 

46 பின்னடைவு காலிப்பணியிடங்கள்

ஆக மொத்தம் 6140 பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்த காலிப்பணியிடங்களை நிரப்பிடுவதற்கான விளம்பரம் வெளியிட்டுள்ளது.

முதன்முறையாக இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறையை ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்கும் முறையை அமல்படுத்தி உள்ளது.

விண்ணப்பதாரர்கள் இக்குழுமத்தின் இணையதளம்  வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்கலாம்.

இணையதள முகவரி:http://www.tnusrbonline.org/

விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் 2018 ஜனவரி 27.

இக்குழுமத்தில் ஒரு உதவி மையம் காலை 09,00 மணி முதல் மாலை 06,00 மணி வரை செயல்படும். விவரங்களுக்கு உதவி மையத்தை தொடர்புகொண்டு விளக்கம் பெறலாம். விண்ணப்பதாரர்கள் உதவிக்கு தொலைபேசி எண்கள்  044-40016200, 044-28413658, 9499008445, 9176243899 மற்றும் 9789035725 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இதேபோன்ற. உதவி மையம் மாநகரத்திலுள்ள காவல் ஆணையாளர் அலுவலகங்களிலும் மற்றும் மாவட்டங்களிலுள்ள காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களிலும் செயல்பட்டு கொண்டிருக்கும்.

இவ்வாறு சீருடை பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது