சிம்லா
சுமார் 6.7 கோடி வருடங்களுக்கு முந்தைய மரத்தின் படிமங்கள் சிம்லா மாவட்டத்தில் கிடைத்துள்ளன.
மரங்கள் பூமிக்கடியில் லட்சக்கணககன வருடங்கள் புதைந்து கிடக்கும் போது அவை படிமங்களாக உருப்பெறுகின்றன. நிலத்தை தோண்டும் போது இவ்வாறு கிடைக்கும் படிமங்களைக் கொண்டு அங்கு நிலவி இருந்த நாகரிகத்தின் வருடங்களை ஆய்வாளர்கள் கண்டறிவது வழக்கம் ஆகும்.
சிம்லா மாவட்டத்தில் சட்ட விரோதமாக மரம் வெட்டுவது குறித்த புகார் வந்ததால் அந்த பகுதியில் வனத்துறை அதிகாரி சந்துலால் சோதனை நடத்தினார். அப்போது அவர் ஒரு இடத்தில் மரத்தின் படிமங்கள் இருப்பதைகண்டார். இங்கு அடிக்கடி நிலச்சரிவு ஏற்படுவதால் பூமிக்கு அடியில் எப்போதோ புதையுண்ட மரத்தின் படிவம் இது என்பதை அவர் அறிந்தார். அதை ஒட்டி அவர் தொல்பொருள் துறைக்கு தகவல் அளித்தார்.
அவர்கள் இந்த படிமத்தை சோதனை செய்துள்ளனர். சோதனை அதிகாரி, “இந்த மரம் பல கோடி வருடங்களுக்கு முந்தையதாகும். சுமாராக இது 6.7 கோடி வருடங்களுக்கு முந்தையதாக இருக்க வாய்ப்பு உள்ளது. அந்த காலத்தில் டைனோசர்கள் வசித்து வந்துள்ளன. எனவே இந்த படிவங்களை மேலும் ஆய்வு செய்வதன் மூலம் பல தகவல்கள் கிடைக்க வாய்ப்புள்ளது” என தெரிவித்துள்ளார்.