இந்தோ திபெத் எல்லைப் பாதுகாப்புப் போலீசில் (ITBP) கமாண்டராக உள்ள ரத்தன் சிங் சோனல் தலைமையில் ஒரு குழு இமயமலையில் மலையேற்றம் சென்றது.

கடல்மட்டத்தில் இருந்து சுமார் 17500 அடி உயரத்தில் உள்ள கர்ஸோக் கங்கிரி சிகரத்தை இந்த குழு சென்றடைந்தது.

-30° செல்சியஸ் கடும் குளிர் நிலவும் இந்த பருவத்தில் மலையேற்றம் சவாலான காரியமாக இருந்தாலும் முதல் முறையாக ITBPயைச் குழு இந்த பகுதியில் மலையேற்றம் செய்தது.

இந்த குழுவிற்கு தலைமை தாங்கிய 55 வயதாகும் ரத்தன் சிங் சோனல் சிகரத்தை அடைந்த பின் ஒரே மூச்சாக 65 முறை தண்டால் எடுத்தது அந்த மலையேற்றைக் குழுவினரை ஆச்சரியமடையைச் செய்தது.

கடும் குளிரில் இந்த வயதில் ஒரே முயற்சியில் இத்தனை முறை புஷ் அப்ஸ் செய்த ரத்தன் சிங் சோனலை சமூக வலைத்தளத்திலும் பாராட்டி வருகின்றனர்.