டெல்லி: நாடு முழுவதும் கடந்த 24மணி நேரத்தில் 5,383 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதுடன், 6,424 பேர் குணமடைந்துள்ளனர். சிகிச்சை பலனின்றி 20 பேர் பலியாகி உள்ளனர்.

மத்திய சுகாதாரத்துறை இன்று காலை 8மணி வரையிலான கடந்த 24மணி நேர கொரோனா பாதிப்பு தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது.  கடந்த சில நாட்களாக 10ஆயிரம் வரை  இருந்த பாதிப்புகள் தற்போது வேகமாக குறைய தொடங்கியுள்ளன.

தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 5,383 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 4,45,58,425 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று ஒரே நாளில் 20 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 5,28,449 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24மணி நேரத்தில்  6,424 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4,39,84,695 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது நாடு முழுவதும் 45,281 பேர் தொற்றுக்காக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாடு முழுவதும் இதுவரை 217.26 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.