புதுச்சேரி மாநிலத்தில் நடைபெற இருக்கும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) சார்பாக அகில இந்திய NR காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் தலைமையிலான NDA கூட்டணியில் அஇஅதிமுக-வுக்கு உப்பளம் மற்றும் முத்தியால்பேட்டை என 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
என்.ஆர். காங்கிரஸ் 16 தொகுதிகளிலும் பாஜக 10 தொகுதிகளிலும் போட்டி. லட்சிய ஜனநாயக கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு.
வேட்புமனு தாக்கல் செய்ய 23ம் தேதி கடைசி தேதி என்ற நிலையில் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் முடிவானது.

எந்தெந்த கட்சிகள் எந்த தொகுதியில் போட்டி ? .
அகில இந்திய NR காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள்.
1. தட்டாஞ்சாவடி
2. மங்களம்
3. திருபுவனை
4. வில்லியனூர்
5. உழவர்கரை
6.கதிர்காமம்
7. இந்திராநகர்
8. லாஸ்பேட்டை
9. அரியாங்குப்பம்
10.ஏம்பலம்
11.நெட்டப்பாக்கம்
12.பாகூர்
13.நெடுங்காடு
14.காரைக்கால் வடக்கு
15.காரைக்கால் தெற்கு
16.ஏனாம்
பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக போட்டியிடும் தொகுதிகள்
1. ராஜ்பவன்
2. மண்ணாடிப்பட்டு
3. மணவெளி
4. காலாப்பட்டு
5. ஊசுடு
6. உருளையான்பேட்டை
7. முதலியார்பேட்டை
8. திருநள்ளார்
9. நிரவி திருப்பட்டினம்
10. மாஹே
அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக போட்டியிடும் தொகுதிகள்.
1. உப்பளம்
2. முத்தியால்பேட்டை
லட்சிய ஜனநாயக கட்சியின் சார்பாக போட்டியிடும் தொகுதிகள்
1. காமராஜர் நகர்
2. நெல்லித்தோப்பு