திருவனதபுரம்
வாட்ஸ் அப் செயலியில் இந்து அதிகாரிகள் குழு தொடங்கப்பட்ட விவகாரத்தில் இரு கேரள ஐஏஎஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்
கேரளாவில் திபாவளி அன்று ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பலரின் வாட்ஸ் அப் செயலியில், ‘ ஹிந்து ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ‘ என்ற பெயர் கொண்ட குழுவில் சேர்க்கப்பட்டு இருந்தனர். இக்குழுவில் ஜூனியர்கள் முதல் மூத்த அதிகாரிகள் பலர் இடம்பெற்று இருந்தனர்.
சிவில் சற்வீஸ் அதிகாரிகல் மதம் மற்றும் ஜாதி ரீதியில் எந்த முடிவு அல்லது செயல்களில் ஈடுபடக்கூடாது என்பது பொதுவான விதி ஆகும் இந்நிலையில் மத ரீதியில் பெயர் கொண்ட ‘வாட்ஸ் அப் குரூப்’ ல் சேர்க்கப்பட்டது அதிர்ச்சியாக இருந்தது. இந்த குரூப்பை ஆய்வு செய்த போது அதன் அட்மின் ஆக இருந்தது மாநில தொழில்துறை இயக்குநரான கோபாலகிருஷ்ணன் பெயரை காட்டியது.
அடுத்த சில நாட்களில் இந்த குரூப் கலைக்கப்பட்டதால் இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. கோபாலகிருஷ்ணன் தனது மொபைல் போன் ஹேக் செய்யப்பட்டதாக கூறியுள்ளார்.
காவல்துறையில் இது குறித்து புகார் அளித்த அவர், தனது நண்பர் ஒருவர் கூறியபிறகே வாட்ஸ் அப் குரூப் துவங்கப்பட்டது தெரியவந்ததாகவும் தமதுது போன் ஹேக் செய்யப்பட்டதுடன், அதன் மூலம் பல வாட்ஸ் அப் குழுக்கள் உருவாக்கப்பட்டன எனவும் கூறியிருந்தார்.
கேரள அரசு இந்த விவகாரம் தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்திய பிறகு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கோபாலகிருஷ்ணன் மற்றும் என்.பிரசாந்த் ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்தள்ளது.