ரவுண்ட்ஸ்பாய் எழுதுகிறார்:

ரவுண்ட்ஸ்பாய்
ரவுண்ட்ஸ்பாய்

இன்றைக்கு தமிழக அரசியலின் பரபரப்பு “பேர விவகாரம்”தான்.
தி.மு.க. – தே.மு.தி.க. இடையே கூட்டணிக்காக பேரம நடந்தது என்று ஊடகங்களில் பல முறை செய்திகள் வந்தன.
தி.மு.கவின் கூட்டணி கட்சியான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்கூட, “தே.மு.தி.க ஏன் எங்கள் கூட்டணிக்கு ஏனஅ வரவில்லை என்பதை வெளிப்படையாக சொல்ல முடியாது” என்றார். அதுவே பலவித யூகங்களை கிளப்பியது.
இப்போது தே.மு.தி.க.வின் கூட்டணியில் இருக்கும் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவும் சொல்கிறார்.
வைகோ போல புள்ளி விவரமாக நமக்கு  சொல்லத்தெரியாவிட்டாலும், , பேரம் நடந்திருக்கும் என்று நம்ப வாய்ப்பு இருக்கிறது.
ஆனால், “தி.மு.கதான் பேரம் பேசியது, அதை விஜயகாந்த் விரும்பவில்லை” என்று வைகோ சொல்வதுதான் இடிக்கிறது.
பேரத்தை விரும்பாத விஜயகாந்த், ஏன் மறுபடி மறுபடி தி.மு.கவை பேரம் பேச அனுமதித்தார்?  ஏனென்றால், இத்தனை கோடி இத்தனை தொகுதி என்கிற அளவுக்கு பேரம் நடந்திருந்தால்  அது ஒரே ரவுண்டில் முடிந்திருக்காது.
ஊழலை ஒழிக்க அவதாரம் எடுத்திருக்கும் விஜயகாந்த், ஏன் இத்தனை ரவுண்ட் தி.மு.கவை பேச அனுமதித்தார்?
தவிர, பேரத்தை விரும்பாதவர் என்றால், வீடியோ.. குறைந்தபட்சம் ஆடியோவாக எளிதாக பதிவு செய்திருக்கலாமே. கண்ணுக்குத்தெரியாத கேமரா, மைக் எல்லாம்  வந்தவிட்டது, அலைபேசியல் குரலை பதிவு செய்ய முடியும்.
கோப்பு படம்
கோப்பு படம்

அப்படி தி.மு.கவினரின் பேரத்தை விஜயகாந்த் எளிதில் பதிவு செய்திருக்கலாமே.
“இதோ பாருங்கள் என்னிடம் தி.மு.கவினர் நடத்திய பேரம்” என்று அந்த ஆதாரங்களை மக்கள் மன்றத்தில் வைத்திருக்கலாமே!
அப்படிச் செய்தால் விஜயகாந்துக்கு மக்களின் ஏகோபித்த ஆதரவு கிடைத்திருக்கும்.
தனித்து நின்றே தே.மு.தி.க. ஆட்சியைப் பிடித்திருக்கும்.
வீடியோ எடுத்தாரா விஜயகாந்த்? எடுத்திருந்தால் எப்போது வெளியிடுவார்  இல்லை என்றால் ஏன் எடுக்கவில்லை?
“பேரம் நடந்தது” என்று உறுதியாகச் சொல்லும் வைகோதான் இதற்கு பதிலைச் சொல்லவேண்டும்.. விஜயகாந்திடம் கேட்டு!

  • ரவுண்ட்ஸ்பாய்