
உடல் வலிக்கு
மருந்துண்டு..
மன வலிக்கு,
மருந்தில்லை!
தனிமையில் அமர்ந்து
கதறி அழக்கூட,
வழியில்லை.!
பார்ப்பவர்கள்
தவறாக நினைப்பார்களே..?!
உறவுக்கும்…
உலகத்திற்கும்…
பதில் சொல்லியே….
சோகத்தில்…
முகத்தில்..
செதில்களே முளைத்துவிடும்..!!
துன்பத்தில் துவழ்பவனை…
தனியே அமர்ந்து..
கண்ணீர் விடவாவது
விட்டுவிடுங்கள்…!!
மனதின் பாரங்கள்…
பனியாய் உருகட்டும்….!!
-A.Muthukumar
Patrikai.com official YouTube Channel