பிரயாக்ராஜ்
நாளை பிரயாக்ராஜ் நகரில் மகா கும்பமேளா தொடங்க உள்ளது.
உ.பி. மாநிலம் பிரயாக்ராஜ் நகரின் திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா நாளை தொடங்கி மகா கும்பமேளா நிகழ்ச்சி பிப்ரவரி.26 ஆம் தேதியுடன் முடிவடைகிறது,. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் கும்பமேளா நிகழ்ச்சி சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. கங்கை, யமுனை மற்றும் கண்களுக்கு புலப்படாத சரஸ்வதி ஆறு ஆகிய 3 நதிகள் சங்கமிக்கும் இடத்தில் நடைபெறுவதால் இது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்த 3 நதிகளும் சங்கமிக்கும் இடத்தை திரிவேணி சங்கமம் என்று அழைக்கிறார்கள். இங்கு கும்பமேளா நடைபெறும் காலங்களில் திரிவேணி சங்கமத்தில் நீராடுவதை இந்துக்கள் புனிதமாக கருதுகிறார்கள்.மகா கும்பமேளாவுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரபிரதேச அரசு பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது.
மொத்தம் 45 நாட்கள் நடக்கும் திருவிழாவில் உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விழாவில் கலந்துகொள்ள வருபவர்களுக்காக தற்காலிக குடில்களை அம்மாநில அரசு அமைக்கப்படு சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகின்றன.
மகா கும்பமேளா நாளை தொடங்குவதை முன்னிட்டு, மலைக்குகைகளிலும் வனங்களிலும் வசிக்கும் நாகா துறவிகள் உள்ளிட்ட பல வகை துறவிகளும் குவிந்துள்ளனர். பிரயாக்ராஜ் நகரை நோக்கி சாதுக்களும், துறவிகளும், சன்னியாசிகளும்,அகோரிகளும் வந்த வண்ணம் உள்ளனர்.
அகோரிகள் விதவிதமான வேடங்களில் வந்து வண்ணப்பொடிகளை தூவியும் கழுத்தில் மண்டை ஓடு மாலையுடன் மந்திரங்கள் முழங்க தெருக்களில் உலா வந்த போது பக்தர்கள் அவர்களை பக்தி பரவசத்துடன் வணங்கினர்