அடை மழைன்னு கேள்விப்பட்டிருக்கேன்.. இன்னைக்குத்தான் பார்த்தேன். (சின்ன வயசு பையங்க!) மழையில ஒரு ரவுண்ட் போயி, கையில இருக்கிற கேமரா மொபைல்ல படம் புடிச்ச காட்சிங்க சில..
மழத்தண்ணி தேங்கி பயங்கர போக்குவரத்து நெரிசல். ஆனா வாகனங்கள் குறைவுதான். நேத்தும், நாளைக்கும் லீவுங்கிறதால இன்னைக்கும் பலபேரு ஆபீஸுக்கு மட்டம்போட்டுட்டாங்க போலிருக்கு. அதோட, பள்ளி, கல்லூரி விடுமுறைவேறயா.. அதான். கூட்டமே இல்லாம பஸ்ஸுங்க ஓடுச்சு…
அடையாறு மெயின் ரோட்டுல விழுந்து கிடந்த மரத்துல கேபிள் ஒயரும் சிக்கிக் கிடந்துச்சு. ரொம்ப நேரமா அப்படியே கிடக்கறதா பக்கத்துல சொன்னாங்க. இதே மாதிரி பல இடங்கள்ல ரோட்டுல மரம் விழுந்து கிடக்குது.
பெருசு பெருசா மாடி ரெயிலுக்கு ஸ்டேசனுங்க கட்டியிருக்காங்க.. உள்ளாற அப்படியே மழை கொட்டுது.
தேங்கி நின்ன மழைத்தண்ணியில வாகனங்கள் மிதக்குது…
இந்த மழையிலயும் சீறிப்பாயற 108 ஆம்புலன்ஸ்களுக்கு ஒரு சல்யூட்..
பாவம்.. ரயில் பிச்சைக்காரர் ஒருத்தரு.. மழை குளிர சமாளிக்க முடியாம வேட்டிய இழுத்து தலைக்கு போத்திகிட்டு நின்னுகிட்டு இருந்தாரு..
நேத்து ராத்திரியிலேருந்து இன்னிக்கு சாயந்திரம் வரைக்கும் கரண்ட் இல்லே… வானம் இருண்டு கிடக்க… பகலில் ஓர் இரவுதான்… சார்ஜ் இல்லாம லேப்டாட் இழுத்துக்க பிடிச்சிக்கனு இருந்துச்சு..
இன்றைய மழைக்காட்சியில மனசை ரொம்ப பாதிச்சது இந்த கூண்டுக்கோழிங்கதான். இந்த பிராய்லர் கோழிகளுக்குமேல் தோலே இருக்காது. அடிச்சு ஊத்துன மழையில பலது நடுங்கிகிட்டு, உயிரை பிடிச்சுகிட்டு நடுங்கனத பாக்கையில மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. இதுங்கள்ல பலது நாளைக்கு வரைக்கும் தாங்குமான்னு தெரியல. அப்படி நடந்துச்சுன்னா, அதையும்தான் விக்கப்போறாங்க… மக்களும் பாவம்தான்!
சரி, கோழிங்க படற பாட்டை ப்ளூகிராஸூக்கு சொல்லுவோம்னு போன் பண்ணேன். அக்கறைய கேட்ட ஆண்குரல், இன்னொரு மொபைல் நம்பர கொடுத்துச்சு. அதுக்கு போன் பண்ணா சுவிட்ச்டு ஆப்.