k16

இரண்டு தினங்கள் msg & call எதுவும் பண்ணாமல் இருக்கிறாள் நாயகி. ஸ்ரீ யை

பார்க்க அவள் வீட்டுக்கு செல்லும் நாயகி rest ல இருக்கும் ஸ்ரீ ஒரே பொழுது

போக்கு நாயகனின் டைம் லைனும் msg ம் தான் என்பதை உணருக்கிறாள்.

அப்போது ஸ்ரீ fb நொண்டிக்கொண்டு இருக்க

என்ன ஸ்ரீ சாட்டிங்கா !?

அது இல்ல

Mm

ஹய் அதுவந்திருச்சு !

என்று சொல்லிகொண்டே ஹாய் சொல்ல, நாயகனிடம் இருந்து வரும் முதல் msg

யே

அந்த லூசு எங்கே ?

நெக்ஸ் டூ மீ…

அது மூஞ்சி மேல குத்து

Y

ரெண்டு நாளா ஒரு msg, call எதுவும் இல்ல…(நோட் பண்ணுங்க msg ல )

ஸ்ரீ நாயகியை பார்த்து கேட்கிறாள்

பேசலையா அது கிட்ட

இல்ல… வேலை இருந்தது.

சொல்லிவிட்டு விலகி செல்கிறாள்.

மறு நாள் ஒரு கவிதை எழுதி post பண்ணும் நாயகி, அப்போ நாயகனிடம் இருந்து

msg வருது.

Oye உன்ன கல்யாணம் பண்ணிக்க ஒருத்தர் ரெடி !

ஒன்னும் முடியலையா உனக்கு

சத்தியமா!

யாருன்னு சொல்லு ?

ஆனா நீ ஆப்ரேசன் பண்ணிகனும்.

எதுக்கு ?

அவங்களும் ஒரு பெண்ணு.

பொண்ணா! யாரது !?

அபிநயா

ha ha ha nice nice.

அந்த பெண் நாயகி என்று தெரியாத நிலையில் msg எதுவும் பண்ணுவதில்லை

அதனால் தன் நண்பரான நாயகனிடம் சொல்ல

இதை அவங்க கிட்ட சொல்லவேண்டியது தானே.

அவங்க யாருக்கும் msg பண்ணமாட்டாங்கன்னு கேள்வி பட்டேன்.

Call பண்ணி சொல்லிடு

அவங்க நம்பர் இல்லையே !

Hello ஏற்கனவே பேசியிருக்க தானே !

நானா !?

ஆமாம். ப்ராபர்டி விசயமா பேசினீயே அவங்க தான் இவங்க.

அப்படியா ! ஆனா பேசும்போது சொல்லவே இல்லையே.

அதான் நான் சொல்லிட்டன்ல

Call செய்கிறாள் அபிநயா.

Hello நீங்க தான் கவிதை எல்லாம் எழுதுவதா !? சொல்லவேயில்லையே !

Hello இதை எதுக்கு சொல்லணும் நீங்க பிசினஸ் சம்மந்தமா வந்திங்க அப்போ

அதை தானே பேசணும்.

ஆமா பா.. ஆனா உங்க கவிதைகள் சூப்பர் பா

அதனால தான் அவங்க ஆம்பளையா இருந்த கல்யாணமே பண்ணிப்பேன்னு

சொன்னீங்களா ?

ஓ… அது சொல்லிடுச்சா ?

சிரித்து கொண்டே ஆமாம் என்கிறாள் நாயகி.

நாளைக்கி அந்த இடத்தை பார்த்திடலாமா பா ?

Ok வாங்க நானும் என்னோட ஹஸ்பெண்டும் வருவோம்.

morning ECR வந்திடுங்க.

சரி பா…

மறுநாள் இருவரும் பிசினஸ் விசயமாக சந்தித்து கொள்கின்றனர். ஜெனரல் ஆனா

விஷயங்கள் மட்டுமே பேசப்பட, அபிநயா நாயகியின் கையை பார்த்து என்னப்பா

இது ?

அது தூக்கத்தில் பால் காய்ச்சும் போது கொட்டிகிட்டேன்.

அய்யோ பார்த்து கவனமா இருக்க கூடாதா ?

மெல்லிய புன்னகையை மட்டுமே பதிலுக்கு கொடுக்க முடிந்தது நாயகிக்கு.

இவர்கள் சந்திப்பால் தன் யோக்கிய வேஷம் கலந்திடுமோ என அஞ்சி நாயகிக்கு

Call பண்றான்.

Oye என்ன பண்ற ?

அபிநயா வந்தாங்க அந்த இடம் பார்த்துட்டு வந்தோம்.

ம்… என்ன சொல்லுச்சு ?

இடத்தை பத்தி யா அது அவ்வளவு போகாது…

வேற எதுவும் பேசலையா ?

வேற என்ன என்னோட கவிதைகள், உன்னோட பதிவுகள் இப்படி ஜென்ரல் ல

பேசினோம்

Mm

நீ அவங்க வீட்டுக்கு கூட போய் இருக்கீயாமே…

ம். வேற என்ன சொல்லுச்சு ?

வேற ஒன்னும் சொல்லல ஏன் துருவி துருவி கேக்குற ?(நாயகன் மைண்டு

வாய்ஸ்: ஆகா யோசிக்கிற யோசிக்கிற பேச மாத்து )

ஒன்னு இல்ல லூசு இன்னொரு பிசினஸ் விசயமா ஒருதவங்கள பத்தி

சொன்னேனே அவங்க ஊர் இருந்து வந்துட்டாங்க எப்போ meet பண்றீங்கன்னு

கேட்டு சொல்லவா ?(அபிநயா அறிமுகத்திற்கு முன்பே அந்த பெண்மணியை

பற்றி சொல்லியிருந்ததால் நினைவில் இருந்தது )

வேண்டாம் வெறுப்பாக சரி கேட்டு சொல்லு. (நாயகனுக்கு ஆம்பளைகளை விட

பொம்பளைகள் தான் அதிகம் frd போல! அதுவும் கல்யாணம் ஆனா குடும்பத்தில்

இருக்கும் பெண்கள். தொடர் படிக்கும் எல்லாருக்கும் இந்த சந்தோகம் இருக்காம். )

நாயகியிடம் சரியான தகவல் கிடைக்காத நிலையில் பதற்றம் தோற்றிக்கொள்ள

அபிநயா வீட்டுக்கே போறான் அந்த நாய் sorry sorry நாயகன்.