மோடி – மாணவி பேச்சு: சொல்லும் பாடம்!

Must read

unnamed (1)

கேள்வி1: மொழியறிவு என்றால் என்ன?
தன்னுடைய தாய்மொழியான தமிழ் பிரதமருக்கு தெரியாது என்ற காரணத்தால், அவரிடம் அவருக்குத்தெரிந்தஆங்கிலத்தில் கேள்வி கேட்ட நெல்லை மாணவிக்கு இருந்ததே மொழியறிவு.

கேள்வி2: மொழித்திணிப்பு என்றால் என்ன?
ஆங்கிலத்தில் கேள்வி கேட்ட மாணவியிடம், அவருக்கு ஹிந்தி தெரியுமா தெரியாதா என்று கூட கவலைப்படாமல்பிரதமர் மோடி ஹிந்தியில் பதிலளித்தார் இல்லையா அதுதான் மொழித்திணிப்பு.

கேள்வி3: மொழியுரிமை என்றால் என்ன..?
எப்போதெல்லாம் ஹிந்தி திணிக்கப்படுகிறதோ அப்போதெல்லாம், “என் மொழியில் எங்கள் அரசாங்கத்திடம்பேசவேண்டும், அரசும் எங்கள் மொழியில் எங்களிடம் பேசவேண்டும்” என்று ஹிந்தியை தாய்மொழியாக கொண்டிராததமிழகம் உள்ளிட்ட பிறமாநில மக்கள் குரல் கொடுக்கிறார்கள் இல்லையா அதுதான் மொழியுரிமை.

கேள்வி4: மொழியின் சிறப்பு என்றால் என்ன?
இதே பிரதமர் மோடி தமிழ்நாட்டு மேடைகளில் பேசும்போது ஆரம்பத்தில் ஒரு சில வார்த்தைகள் மக்களுக்கு புரிகிறதமிழ் மொழியில் பேசி கைத்தட்டல் வாங்க முடிகிறதல்லவா அதுதான் மொழியின் சிறப்பு…!

கேள்வி 4-க்கு இன்னொரு நெருக்கமான பதில் Sridhar சொன்னது.
இங்கிலாந்தில் எந்த அரசு படிவங்கள் வேண்டுமானாலும் நீங்கள் தமிழில் வேண்டும் என்று கேட்க முடியும். ஆங்கிலம்தவிர்த்து பெங்காலி, தமிழ், வெல்ஷ் மற்றும் ப்ரெயில் இந்த நான்கில் அவர்கள் அரசுப் படிவங்கள் இணைய தளங்கள்எல்லாமே வைத்திருக்கிறார்கள். அதுதான் மொழியின் சிறப்பு.

Sivasankaran Saravanan

More articles

Latest article