நேபாளிகள

க்கு கோலாலம்பூர்:
செக்யூரிட்டி பணிகளை நேபாளிகளுக்கு மட்டுமே வழங்குவது என்ற விதியில் மாற்றம் கொண்டு வர மலேசிய அரசு பரிசீலித்து வருகிறது.
மலேசியாவின் துணைப் பிரதமர் நூர் ஜஸ்லான் முகமது கூறுகையில்,‘‘ மலேசியாவில் நேபாள நாட்டைச் சேர்ந்தவர்கள் மட்டுமே பாதுகாவலராகப் பணியாற்ற முடியும் என்ற விதி உள்ளது.
கூர்க்காக்களின் போரிடும் திறன் காரணமாக, பாதுகாவலர் பணி முழுவதும் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. எனினும் போதிய அளவு நேபாளிகள் கிடைக்கவில்லை. அதனால் பிற நாடுகளைச் சேர்ந்தவர்ளை பாதுகாப்பு பணியில் அமர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.  ராணுவப் பின்னணி கொண்ட பிற நாடுகளைச் சேர்ந்தவர்களை பாதுகாப்பு பணிகளில் அனுமதிப்பது குறித்து பரிசீலனை செய்யப்படுகிறது’’ என்றார்.