
என்ன கொடுமை இது…அடேங்கப்பா ஆபிசர்ஸ்
ராமமூர்த்தி, 28 வயது. கிருஷ்ணகிரியின் குடிசாதனபள்ளி கிராமம். அண்மையில் சியாச்சின் பகுதி பனிச்சரிவில் பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ள 10 ராணுவ வீரர்களில் இவரும் ஒருவர்…
திருமணமாகி மூன்றரை ஆண்டுகளே ஆகின்றன. இரு தடவை மட்டுமே விடுமுறையில் கிராமத்திற்கு வந்து மனைவியுடன் வாழ்ந்துள்ளார். குழந்தை இல்லை. இப்போது 22 வயது இளம் மனைவியான சுமிதா இடிந்து போயுள்ளார்..
20 வயதில் ஆர்வத்துடன் ராணுவத்திற்கு போன ராமமூர்த்திக்கு பனிச்சரிவில் இருந்து எந்த கோலத்தில் எப்போது மீட்கப்படுவார் என்பது தெரியாத நிலையில் நொறுங்கிப் போய் இருக்கிறது அவரின் ஏழ்மையான விவசாய குடும்பம்..
எதிர்காலமே கேள்விக்குறியான நிலையில், சுமிதாவின் குடும்பத்தை மாவட்ட நிர்வாகம் தரப்பிலிருந்து யாருமே தங்களை தொடர்பு கொண்டு இதுவரை பேசவில்லை என்று அவர்கள் சொல்கிற தகவல்….
மேற்கொண்டு ஒன்றும் சொல்வதற்கில்லை. அருமை யான மாவட்ட நிர்வாகம்.
பனிச்சரிவில் புதைந்தவாகளை மீட்கும் பணியை கைவிடவில்லை என்று பாதுகாப்பு அமைச்சர் பாரிக்கர் சொல்லிருக்கும் நிலையில் .இயற்கையின் ஆச்சயர்ங் களின் ஒன்றாக, ராமமூர்த்தி உயிருடன் கிடைப்பார் என்று நம்பும் சுமிதாவின் நினைப்பு மெய்யாகவேண்டும்.

Ezumalai venkatesan