நெட்டிசன்: எதைச் சொல்ல, எதை விட !!!!!

Must read

m 2

 

னோரமா.
எப்பேர்ப்பட்ட நடிப்புக் கலைஞர் !!!!!
கதாநாயகியிலிருந்து துப்புரவுத் தொழிலாளி வரை இவர் ஏற்று நடித்த பாத்திரங்கள்தாம் எத்தனை எத்தனை !!!!!
எதைச் சொல்ல, எதை விட !!!!!
இவர் ஏற்று நடித்தால் அந்தப் பாத்திரங்கள் தாம் அஞ்சும், தம்மைத் துவைத்துக் காயப் போட்டு , கதற அடித்து விடுவாரே என்று !!!!
நடித்துக் கொண்டிருக்கும்போதே தன் உயிர் போய்விட வேண்டும் என்று விரும்பியவர்.
இவருடைய இழப்பு ஐயத்துக்கு இடமின்றி மாபெரும் இழப்பு !!
இவர் தமிழ்ச்சமுதாயத்தின் சொத்து.
1000 படங்களுக்கு மேல் நடித்த கின்னஸ் சாதனையாளர். அவருடைய சாதனையளவுக்கு அவர் கௌரவிக்கப்படவில்லை என்பது நமக்கு இழிவு !!!
அரசு மரியாதையோடு அவர் இறுதி யாத்திரை நடைபெறவேண்டும்.

50 ஆண்டுகளுக்கும் மேலாக எங்களையெல்லாம் சிரிக்க வைத்தீர்கள்.
போய் வாருங்கள் அம்மையீர்… கண்ணீரோடு கைகூப்புகிறோம்.
( அவர் வயதான, இறுதித் தோற்றத்தை நான் காண விரும்பவில்லை. வெள்ளித்திரையில் எப்படித் தோற்றமளித்தாரோ அப்படியே எப்போதும் நினைவுகூர விரும்புகிறேன் ).

– கவிஞர் தாமரை

More articles

Latest article