நீதிக்கதை: மாட்டுக்கறியும், பன்றிக்கறியும்..

Must read

 

beef_pork

 

ரு கிராமத்தில்ஓநாய் ஒன்று தன் குட்டியுடன் வாழ்ந்துவந்தது.

ஒரு நாள் ஓநாய்குட்டி தன் தாயிடம்”எனக்கு மனிதனுடைய மாமிசம் சாப்பிட வேண்டும்” என்றது.ஓநாய் அலைந்து திரிந்தும்மனிதமாமிசம் கிடைக்காததால் பன்றியின் மாமிசத்தை கொண்டுவந்து கொடுத்தது.அதை முகர்ந்து பார்த்த குட்டி”இது பன்றிக்கறி எனக்கு வேண்டாம்.மனிதமாமிசம்தான்வேண்டும் என்றது.மீண்டும் அலைந்துதிரிந்த ஓநாய் மனிதமாமிசம் கிடைக்காததால் மாட்டிறைச்சியை கொண்டுவந்து கொடுத்தது.அதை உண்ண மறுத்த குட்டிமனித இறைச்சிக்காக அடம்பிடித்தது.அப்போது ஓநாய் மனதில் ஒரு திட்டம் தோன்றியது.அன்றிரவு அங்குள்ள பள்ளிவாசலில் பன்றிக் கறியையும்கோவிலில் மாட்டிறைச்சியையும் வைத்துவிட்டு வந்துவிட்டது.மறுநாள் காலை சென்று பார்க்கும்போது ஊர் முழுவதும் மனிதஉடல்கள் சிதறிகிடந்தன.ஓநாயும் ஆசைத்தீர மனிதமாமிசத்தை உண்டு தங்களது பசியை தீர்த்துகொண்டன.இது எப்படி சாத்தியமாயிற்றுஎன்று குட்டி தன் தாயிடம் வினவியது.அதற்குஓநாய்”90% முட்டாள்கள் வாழும் தேசத்தில் எல்லாமே சாத்தியம்தான்”என்று சொல்லி சிரித்தது.

 11753654_843576992362168_5191146671043164269_n     Jayant Prabhakar  https://www.facebook.com/akalyaakrishna?fref=nf

 

 

More articles

Latest article