தே.மு.தி.க. “செயல் தலைவர்” பிரேமலதா போட்டியிடாதது ஏன்?

Must read

4
க்கள் நலக்கூட்டணியுடன் கூட்டணி அமைத்துள்ள தே.மு.தி.க. தனது கட்சி வேட்பாளர்களின் இறுதிப் பட்டியலை அறிவித்துவிட்டது. அக் கட்சியின் தலைவர் விஜயகாந்த்  மட்டுமே தேர்தலில் போட்டியிடுகிறார். கட்சியின் “செயல் தலைவரான” பிரேமலதா போடடியிடவில்லை.
இது கட்சியினரிடமும், அரசியல் வட்டாரத்திலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
தே.மு.தி.க. கட்சியைப் பொறுத்தவரை, முக்கிய முடிவுகளை எடுப்பவர்கள் – தமிழகம் அறிந்த தலைவர்கள் மூவர்தான். அவர்கள்.. விஜயகாந்த், அவரது மனைவியும் மகளிர் அணி தலைவருமான பிரேமலதா,  பிரேமலதாவின் தம்பியும் இளைஞரணி பொறுப்பாளருமான சுதீஷ் ஆகியோர்தான்.
சுதீஷ், எப்போதும் டில்லி அரசியலில் ஆர்வம் காட்டுபவர். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில்கூட சேலம் தொகுதியில் போட்டியிட்டார். அதில் தோல்வி அடைந்தாலும், மீண்டும் பாராளுமன்றம் செல்லவே அவர் விரும்புகிறார். ஆகவே வரும் சட்டமன்ற தேர்தலில் அவர் போட்டியிடாதது ஆச்சரியமில்லை.
ஆனால் “விஜயகாந்தை வழிநடத்துகிறார்” என்றும், “கட்சியின் செயல்தலைவர்” என்றும்  நம்பப்படும் பிரேமலதா போட்டியிடாதது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இது குறித்து கட்சி நிர்வாகிகள் சிலரிடம் விசாரித்த போது கிடைத்த தகவல்கள்:
“கேப்டன் (விஜயகாந்த்) பேசுவது பலருக்கும் புரியவில்லை. தவிர தமிழகம் முழுதும்  சுற்றி வந்து பிரச்சாரம் செய்யும் நிலையில் அவரது உடல் நலம் இல்லை. இப்போது மக்கள் நலக்கூட்டணி மற்றும் தே.மு.தி.க. கூட்டணியின் நட்சத்திர பேச்சாளராக இருப்பவர் அண்ணியார் (பிரேமலதா)தான்.
இந்த நிலையில் அவர் போட்டியிட்டால், அந்தத் தொகுதியிலேயே முடங்கிவிட நேரிடும்.  ஆகவேதான் அவர் போட்டியிடவில்லை.
தவிர, தி.மு.க.வை குடும்ப அரசியல் என்று தொடர்ந்து விமர்சித்துவருகிறார் அண்ணியார். இந்த நிலையில் அவரும் போட்டியிட்டால், அதே குடும்ப அரசியல் விமர்சனத்தில் தானும் சிக்க வேண்டியிருக்குமே என்பதும் அவர் போட்டியிடாத காரணங்களில் ஒன்று” என்றார்கள்.
 
 

More articles

Latest article