amma-umaiyaal

 

மதிய நேரம் உணவு இடைவேளைக்கு பின் ஜெயந்தி ஆபீஸ்ல busy யா இருக்க ஒரு போன் வருது.

ஹலோ… மேம் நீங்க பவித்ரா அம்மா தானே !?

ஆமாம்…

நாங்க ஸ்கூல் ல இருந்து பேசுறோம். கொஞ்சம் ஸ்கூலுக்கு வரமுடியுமா ?

“என்னாச்சு பவித்ராவிற்கு ” என்றாள் பதட்டத்தோடு.

எதிர் முனையில் பேசியதை கேட்டுகொண்டிருந்த ஜெயந்திக்கு கண்ணீர் கன்னம் தாண்டி சென்றது.

“அப்போ பக்கத்தில் யார் இருந்தா ?”

போனை யாமினி கிட்ட கொடுங்க மேம்…

“யாமினி சொல்லுமா என்ன நடந்தது ?” கேட்டுகொண்டே புறப்படுகிறாள்.

“aundi அந்த ராஸ்கல் பவிய கொஞ்ச நாளா பாலோ பண்றான் ஆண்டி…

பவிக்கு பிடிக்கல…

இன்னிக்கி லஞ்ச டைம் அப்போ வந்து பேசினான். பவிக்கு கோவம் வந்து அடிச்சிட்டா…

அவன் பவியோட ஷால புடிச்சு இழுத்ததுல சுடிதார் கிழிஞ்சுடுச்சு ஆண்டி…

நீங்க பவிகிட்ட பேசுங்க ஆண்டி…

அவ அழுதுகிட்டே இருக்க” என்று சொல்ல

உங்க மேம் கிட்ட கொஞ்சம் போனை கொடுமா… என்றாள்.

போனை வாங்கிய AHM

“மேம்… நீங்க டென்சன் ஆகாதிங்க அவனை ஆபிஸ் ரூம்ல தான் வச்சிருக்கோம்.

பேரன்சை வரசொல்லி tc கொடுத்துடுவோம்” என்று சொல்ல.

பேரன்சை வரசொல்லிடீன்களா மேம் !?

“yes மேம் … இந்தமாதிரி ஸ்டுடன்ட் இனியும் வச்சிருக்க மாட்டோம். நீங்க டென்சன் ஆக வேண்டாம். நீங்க பவித்ரா கிட்ட பேசுங்க ரொம்ப அழறா.” என்று சொல்ல

மேம் plzz நான் வர்ற வரைக்கும் அவசர படவேண்டாம். நான் வந்துகிட்டு இருக்கேன்.

ஓகே மேம் ! பவித்ரா கிட்ட போன் தர்றேன்னு சொல்ல

“வேண்டாம் மேம் கொஞ்ச நேரத்தில் call பண்றேன் நீங்க அவள பத்திரமா பார்த்துகோங்க” என்றால் ஜெயந்தி.

ya sure மேம்…

இணைப்பு துண்டிக்கப்பட்டது.

ஜெயந்தி எதையும் தெளிவாக யோசித்து முடிவெடுக்கு குணம் கொண்டவள். வீட்டை எதிர்த்து காதல் திருமணம் செய்துகொண்டால். கணவரின் குணம் மாற தைரியமாக வெளியே வந்து வாழதொடக்கும் போது பவித்ராவுக்கு இரண்டு வயது. அதன் பின் அவள் மட்டுமே உலகமாகி போனால் ஜெயந்திக்கு. இன்று பவித்ராவிற்கு 15 வயது. நல்ல ஸ்கூல் கொயட் தான். இதுவரை எந்த பிரச்சனையும் இல்லை படிப்பிலும் விளையாட்டிலும் சிறந்தவள் பவித்ரா. நல்ல ஒழுக்கத்தை சொல்லிகொடுத்து வளர்க்கிறாள் ஜெயந்தி. ஆனால் வயது !!

ஒரு தீர்மானத்திற்கு வந்தவளாய் ஸ்கூலுக்கு call பண்ணி பொண்ணுகிட்ட பேசனுன்னு சொல்ல

பவித்ராக்கு போன் கொடுக்கபடுகிறது.

மா…எனும் போதே வார்த்தைகள் உடைத்து அழ தொடங்கினாள் பவித்ரா !

கொஞ்சம் அழ விட்டு

நிறுத்து பாப்பா என்னாச்சி இப்போ!? என்று கொஞ்சம் கோவமாக கேட்கும் அம்மாவை புரியாமல் திகைப்போடு நடந்த விசயத்தை சொல்லதொடங்க

பதியில் நிறுத்த சொல்லி அதட்டுகிறாள். அமைதியாகும் மகளிடம் பேசதொடங்கினாள் ஜெயந்தி.

அந்த பையன் உன்ன டிஸ்டப் பண்றான்னு ஏன் என்கிட்ட சொல்லல !?

seri ரொம்ப தொந்தரவு கொடுத்தால் ஸ்கூல்ல யாவது கம்ளைண்ட் பண்ணினியா !?

பவி: இல்லமா.

ஏன் !?

seri அதைவிடு அவன் உன்கிட்ட பேசவந்தப்போ எடுத்தும் உன்மேல கை வச்சானா !?

பவி: No மாமி.

So… அவன் பேசத்தான் முயற்சி பண்ணிருக்கான் அப்படி தானே !

பவி : ம்…

பிடிக்கலைனா டீசண்டா எனக்கு love எல்லாம் பிடிக்கது sorry. frd ah இருப்போனு சொல்லியிருக்கணும். இல்லையா எனக்கு உன்னை பிடிக்கலை sorry என்னை டிஸ்டப் பண்ணாதனு சொல்லியிருக்கணும். அதை விட்டுட்டு அவனை அடிக்கிற அதிகாரம் எப்படி வந்தது உனக்கு !!??

பவி : ………..

என்ன பாப்பா அமைதியா இருக்க சொல்லு…

பவி: தப்பு தா மா…

Good ! Feel பண்ணாத அம்மா வர்றேன். என்றாள் சற்று கனிவாக.

ஸ்கூல் உள்ளே ஜெயந்தி வந்தபோது பவி தன் தவறை உணர்ந்திருந்ததால் அழுகை நின்றிருந்தாது. ஆனால் களையிழந்த ஓவியமாய்

மகளை பார்த்தபோது கொஞ்சம் தடுமாறி போனாள். அழுகையை கட்டுப்படுதிகொண்டு மகளை அணைத்து தலையை வருடினாள். அதற்குள் அந்த பையனின் தந்தை வர போனில் எல்லாம் சொல்லியிருந்ததால். வந்தவர் மகன் அடிக்க கையை ஓங்க இடை மறித்தாள் ஜெயந்தி. சார் plzz விடுங்க ஏதோ தெரியாம பண்ணிடான். சின்ன பையன் தானே சரியாயிடும்ன்னு சொல்ல அவர் ஏதேதோ புலம்ப சமாதனம் செய்து. HM கிட்ட பேசி பனிஷ்மெண்ட் வேண்டான்னு கேட்டுக்கொண்டாள் ஜெயந்தி. அப்போது தான் அந்த பையனை பார்த்தாள் ஜெயந்தி. ஒரு வித குற்றவுணர்வு, அவமானத்தில் தலைகுனிந்து நின்றிருந்தான். அருகில் சென்று தம்பி உங்க பேர் என்ன?

தலைநிமிராது நவீன் என்றன்.பவித்ராவை பார்த்து கையசைக்க அருகில் வந்தவளை பார்த்து நவீனை அடித்ததுக்கு sorry சொல்லுன்னு சொல்ல

சட்டுன்னு நிமிர்த்து அதெல்லாம் வேண்டாம் ஆண்டி என்ற நவீன் sorry பவி ன்னு சொல்லிடு திரும்பி கொண்டான் அழுகையை கட்டுப்படுத்த தோளை தட்டி ஆசுவாச படுத்தி அமைதியான பின் இருவரையும் பார்த்து இனி நல்ல frds ah இருக்கணும் ரெண்டு பேரும் ன்னு சொல்லி கைகுலுக்க செய்கிறாள் ஜெயந்தி. நவீன் தந்தை ஜெயந்தியின் மேல் நல்ல மரியாதை எழ கைக்கூப்பி நன்றி என்றார். HM முகத்தில் பிரச்சனை இவ்வளவு எளிதாய் முடிந்த நிம்மதி தெரிய மகளை அழைத்துக்கொண்டு புறப்பட்டாள் ஜெயந்தி. சில மாதங்களுக்கு பிறகு காலிங் பெல் அடிக்க கதவை திறந்தாள் ஜெயந்தி. நவீன் ! வாப்பா …

ஆண்டி பவி நோட்ஸ் கேட்ட அதான்…

பவி… நவீன் வந்திருக்கான் பாரு…

உக்காருப்பா…

என்று கிச்சன் போய் காபி கொண்டுவந்தால். பவித்ராவும் நவீனும் பேசிக்கொண்டு இருக்க. அர்த்தத்தோடு சிரித்தால் ஜெயந்தி. அதில் ஆயிரம் அர்த்தங்கள் இருந்தது