நியூஸ்பாண்ட் அனுப்பிய வாட்ஸ் அப் தகவல்:
கோட்டையில் இரவு வேலைகளில் சில அலுவகங்களில் கண்விழித்து சின்சியராக சில உயரதிகாரிகள் பணியாற்றி வருகிறார்கள்.  கோப்புகளை அழிக்கும் வேலைதான் அது.   முக்கியமாக மின் துறைியல்தான் இந்த அழிப்பு வேலை  பெரிய அளவில் நடக்கிறது.  சூரிய ஒளி மின்சார உற்பத்தித் திட்டத்துக்காக  தனியாருக்கு ஒப்பந்தம் வழங்குவதில் நடைபெற்றுள்ள பெரும் ஊழலை மறைக்கவே இந்த அழிப்புகள் நடக்கின்றன.  பின்தேதியிட்டு கோப்புகளை உருவாக்கும் வேலையும்  தீவிரமாக நடக்கிறது.