நாட்டை பிளவு படுத்தும் மோடி, யோகி: பிரபல ஆன்மீகவாதி மொராரி பாபு குற்றச்சாட்டு

காந்திநகர்:

குஜராத்தை சேர்ந்த பிரபல ஆன்மீகவாதியும், ராமன் கதா புகழ்  மொராரிபாபு, பிரதமர் மோடி மற்றும் உ.பி. மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மீது கடுமையாக சாடி உள்ளார்.

மோடியும், யோகியும் இந்து கடவுள்களை வசைபாடி, இந்துயிசத்தை பிளவுபடுத்த முயற்சிக்கிறார்கள் என்று குற்றம் சாட்டி உள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட உ.பி. மாநில முதல்வர் யோகி,   அனுமான் ஒரு தலித்,  அவர் பழங்குடி இனத்தை சேர்ந்தவர். அவர் இந்தியா முழுக்க இணைந்து இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். ராமரின் ஆசையும் அதுதான். தெற்கும் வடக்கும், மேற்கும் கிழக்கும் இணைந்து இருக்க ஆசைப்பட்டார். அதை நாம் நிறைவேற்ற வேண்டும். பாஜக அதை நிறைவேற்றும் எனவே தலித் மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும்  என்று வேண்டுகோள் விடுத்தார்.

இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. யோகியின் பேச்சுக்கு நாடு முழுவதும் உள்ள ஆன்மிக வாதிகள், பிராமணர்கள் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

இந்த நிலையில்,  குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற “ராம் கதா”  என்ற ராமாயண சொற்பொழிவாளரும், ஆன்மிகவாதியுமான  மொராரிபாபு மோடி மற்றும் யோகிமீது கடுமையாக சாடி உள்ளார்.

யோகியும், மோடி நமது கடவுள்களை இழிவுப்படுத்தி இந்துயிசத்தை பிளவு படுத்த முயற்சிக்கின்றனர் என்று கோபமாக கூறி உள்ளார்.

Tags: Yogi & Modi’s project of dividing Hinduism & abusing our Gods, நாட்டை பிளவு படுத்தும் மோடி, யோகி: பிரபல ஆன்மீகவாதி மொராரி பாபு குற்றச்சாட்டு