யோகா சாமியார் ராம்தேவ் அரசியலுக்கு முழுக்கு

டில்லி:

அரசியலில் செயல்பாடுகளில் இருந்து விலகுவதாக யோகா சாமியார் பாபா ராம்தேவ் அறிவித்துள்ளார்.

யோகா குருவான பாபா ராம்தேவ் பல கோடி ரூபாய் முதலீட்டல் பதஞ்சலி ஆயுர்வேதிக் நிறுவனத்தை நடத்தி வருகிறார். பாஜக ஆதரவாளரான இவர் அக்கட்சிக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரங்களிலும் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில் அவர் தற்போது அரசியல் செயல்பாடுகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ‘‘2019ம் ஆண்டு தேர்தலில் பாஜக உள்ளிட்ட எந்த கட்சிக்கும் ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்மாட்டேன்’’என்று தெரிவித்துள்ளார்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: yoga guru Baba Ramdev says he’s stepped away from politics, யோகா சாமியார் ராம்தேவ் அரசியலுக்கு முழுக்கு
-=-