வரும் 16 ஆம் தேதி முதல் 10 ஆம் வகுப்பு சான்றிதழ் விநியோகம்

சென்னை

ரும் 16 ஆம் தேதி முதல் 10 வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு அசல் சான்றிதழ் வழங்கப்படுமென அரசு தேர்வு இயக்ககம் அறிவித்துள்ளது.

இந்த வருடம் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்றது.   இந்த தேர்வை மொத்தம் 10,01,140 மாணவர்கள் எழுதினார்கள்.  இந்த தேர்வின் முடிவுகள் மே மாதம் 23 ஆம் தேதி வெளியானது.    இதில் 96.4% மாணவிகளும்,  92.5% மாணவர்களும்தேர்ச்சி பெற்றனர்.

தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான தற்காலிக சான்றிதழ் (PROVISIONAL CERTIFICATE) உடனடியாக வழங்கப்பட்டது.     இதைக் கொண்டு மாணவர்கள் மேற்படிப்புகளில் இணைந்துள்ளனர்.   இந்நிலையில் அரசு தேர்வு இயக்ககம் ஒரு புதிய அறிவிபை வெளியிட்டுள்ளது.

அதன்படி வரும் 16ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் 10 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களுக்கு அசல் சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.    இந்த சான்றிதழ்களை மாணவர்கள் தங்கள் பள்ளியின் தலைமை ஆசிரியர்களிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.

இந்த பத்தாம் வகுப்பு தேர்வை பல தனித் தேர்வர்களும் எழுதி உள்ளனர்.   அவர்கள் தங்கள் சான்றிதழ்களை தாங்கள் தேர்வு எழுதிய மையத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
English Summary
X students can get their original certificates from 16/08/2018