டில்லி,

பாராளுமன்றத்தில் நிதி அமைச்சர் இன்று தாக்கல் செய்துள்ள பொது பட்ஜெட்டில், கர்ப்பிணி பெண்களுக்கான பேறு கால விடுமுறை காலம், சம்பளத்துடன்  26 மாதங்களாக அதிகரிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

தொடக்கத்தில் பெண்களுக்கான பேறுகால விடுமுறை  6 மாதமாக இருந்தது. பின்னர் அது ஒரு வருடமாக மாற்றப்பட்டது.

இதற்கிடையில், கடந்த 2016ம் ஆண்டு பாராளுமன்றத்தில், பணி புரியும் பெண்களின் பேறுகால சம்பளத்துடனான விடுமுறையை 12 மாதத்தில் இருந்து 26 மாதமாக உயர்த்தும் சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில், இன்றைய பட்ஜெட்டில், நிதி அமைச்சர் அதை உறுதி செய்யும் வகையில், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் கர்ப்பிணி பெண்களின்  பேறுகால விடுமுறை, சம்பளத்துடன் 26 மாதமாக உயர்த்தப்படும் என்று அறிவித்துள்ளார்.

மேலும், முத்ரா கடன் திட்டம் மேலும் விரிவாக்கம்  செய்யப்படும் என்றும்,  பெண்களுக்கும் தாழ்த்தப்பட்டோரும் பயன்பெரும் வகையில், அதில்  விசேஷ ஒதுக்கீடாக  76% பெண்களுக்கு வழங்கப்படும் (ரூ. 3 லட்சம் கோடி)  என்றும், அதுபோல வருங்கால வைப்பு நிதியில் முதல் 3 ஆண்டுகளுக்கு பெண்கள் 8% செலுத்தினால் போதும் போன்ற பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார்.